நுழைவுச்சீட்டு இருந்தும்ரசிகர்கள் திரும்பச் சென்றது வேதனை அளிக்கிறது: நடிகர் தனுஷ்

Wait 5 sec.

நுழைவுச்சீட்டு இருந்தும் ரசிகர்கள் திரும்பச் சென்றது வேதனை அளிக்கிறது என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள 'ஓம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் நற்பணி இயக்க நிர்வாகிகள் திரண்டதால் அரங்கில் கூட்ட நெரிசல் நிலை ஏற்பட்டது.அரங்கம் முழுமையாக நிரம்பியதைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி நுழைவு வாயில்கள் பூட்டப்பட்டன. இதனால் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களும் உள்ளே செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பும் சூழ்நிலை உருவானது. இந்தச் சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.ரசிகர்கள் சந்தித்த இந்த சிரமத்திற்கு பொறுப்பேற்று, நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வரமுடியாமல் திரும்பச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது யாருடைய தவறு? என்று நான் ஆராய விரும்பவில்லை… நானே இதற்குப் பொறுப்பேற்று என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு." என்று குறிப்பிட்டுள்ளார். Actor Dhanush stated that it is painful that fans had to return back despite having entry tickets.விரைவில் திரைக்கு வரவிருக்கும் ஆனந்த் தேவரகொண்டாவின் ‘ஜெய் ஜெய் கணேசா’!