தீபாவளி பண்டிகையைக் கொண்டாட மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களை நோக்கி படையெடுப்பதால், சுங்கச்சாவடிகளில் 2-ஆவது நாளாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகையையொட்டி, தென் மாவட்டங்களை நோக்கிச் செல்லும் வாகனங்களால் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகளில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (நவ.8) கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி பண்டிகையன்று மட்டுமல்லாது, மறுநாளான திங்கள்கிழமை (நவ.9) அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர், தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், இதர நிறுவனங்கள், தொழில்சாலைகளில் பணியாற்றுவோர், வர்த்தகம் செய்வோர் தங்கள் சொந்த ஊர்களில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் நோக்கில், வெள்ளிக்கிழமை காலை முதல் கார் உள்ளிட்ட வாகனங்களில் புறப்படத் தொடங்கினர்.வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை சுமார் 53 ஆயிரம் வாகனங்கள் விக்கிரவாண்டி சுங்கச் சாலையைக் கடந்தன.வெள்ளிக்கிழமையன்று வாகனங்களின் எண்ணிக்கை அதிகமானதால் விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் 8 வழிப்பாதைகளும் திறக்கப்பட்டு, போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. மேம்பாலப் பணிகள் நடைபெறும் பகுதிகள் மற்றும் நெரிசல் ஏற்படும் பகுதிகளில் காவல்துறை சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.இந்த நிலையில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை காலையும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.முற்பகல் 11 மணிநிலவரப்படி 24 ஆயிரம் வாகனங்கள் விக்கிரவாண்டி சுங்கச் சாலையை கடந்த நிலையில், பிற்பகல் ஒரு மணிக்கு 28,304 வாகனங்களும் மாலை 5 மணிக்கு 33, 119 வாகனங்களும் சுங்கச்சாவடியை கடந்து சென்றன. இரவு 12 மணிக்குள் சுமார் 40 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்லலாம் என எதிர்பார்க்கப்படுவதாக சுங்கச்சாவடி வட்டாரங்கள் தெரிவித்தன.திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட திண்டிவனம் ஜக்காம்பேட்டை விக்கிரவாண்டி , முண்டியம்பாக்கம், விழுப்புரம் அண்ணாமலை உணவக சந்திப்புப் பகுதி, இருவேல பட்டு மற்றும் அரசூர் ஆகிய பகுதிகளில் மேம்பாலப்பணிகள் நடைபெறுவதால் அந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வாகனங்களை சீர் செய்து செய்து அனுப்பி வைத்தனர்.விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. செ.மதிவாணன் உத்தரவின் பேரில், விக்கிரவாண்டி டி.எஸ்.பி.சுரேஷ்குமார் தலைமையில், காவல் ஆய்வாளர் சத்தியசீலன் மற்றும் போலீஸார் பாதுகாப்பப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி... முதல்வர் விஜய் தீபாவளி வாழ்த்து!As people head to their hometowns to celebrate the festival of Diwali, traffic congestion has been reported at toll plazas for the second consecutive day.