விஎஸ் பாபு வீடு திரும்பினாரா? பரவும் தகவலால் பரபரப்பு

Wait 5 sec.

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு, உடல் நலம் பெற்று குணமடைந்து வீடு திரும்பியதாக வரும் தகவல்கள் உண்மையில்லை என்று தெரிய வந்துள்ளது.கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வி.எஸ். பாபு உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவரது நிலை என்ன? அவரது உடல்நிலை குறித்து எந்தத் தகவலும் அண்மைக் காலமாக வெளியாகாத நிலையில் சமூக வலைத்தளங்களில் கடந்த ஒரு சில நாள்களாக அவரைப் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.இதற்கிடையே, அவர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. ஆனால் அதில் உண்மையில்லை என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு மருத்துவமனையில்தான் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார். இதற்கிடையே அவரது உடல்நிலை குறித்து வெளியான தகவல் பொய்யானது என்ற தெரிய வந்துள்ளது.பேரவைத் தேர்தலில்...தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின்போது கொளத்தூர் தொகுதியில், முதல்வராக இருந்த மு.க. ஸ்டாலினை தோற்கடித்து எம்எல்ஏ ஆனவர் வி.எஸ். பாபு. முதல்வர் வேட்பாளரையே தோற்கடித்த வி.எஸ். பாபு, தமிழக அமைச்சரவையில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு இடம் வழங்கப்படவில்லை.இந்த நிலையில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். Did VS Babu return home Speculation causes a stir