சென்னை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை (நவ. 7) தெரிவித்துள்ளது.சுமார் 0.9 கி மீ உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலரோப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், தேனி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், கடலூர், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மதுரை உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை!The Meteorological Centre stated on Saturday (Nov. 7) that rain is likely in 23 districts, including Chennai, until 10 PM.