தீபாவளி: பைக் சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை!

Wait 5 sec.

தீபாவளி பண்டிகையையொட்டி, பைக் சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை சனிக்கிழமை (நவ. 7) எச்சரிக்கை விடுத்துள்ளது.நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. புத்தாண்டு, தீபாவளி போன்ற பண்டிகை நாள்களில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் பைக் ரேஸில் ஈடுபடுவதும் பைக் சாகசங்களை நிகழ்த்துவதும் உண்டு.இதனால், சாலைகளில் எதிர்பாராத விபத்துகள் ஏற்பட்டு அவை பொதுமக்களையும் பெரிதும் பாதிக்கிறது. இதுமாதிரியான நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதற்காக அறிவிப்பு ஒன்றை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து காவல்துறை தனது எக்ஸ் தளப் பதிவில், “தீபாவளி கொண்டாட்டத்தில் பைக் சாகசத்திற்கு இடமில்லை! இருசக்கர வாகனப் பந்தயம் மற்றும் ஆபத்தான பைக் சாகசங்கள் மீதுகடும் சட்ட நடவடிக்கை!” என்று குறிப்பிட்டுள்ளது.மேலும், தீபாவளிப் பண்டிக்கையையொட்டி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே சோதனைச் சாவடிகளை அமைத்து காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.தீபாவளி: சுங்கச்சாவடிகளில் 2-ஆவது நாளாக போக்குவரத்து நெரிசல்!In view of the Diwali festival, the Tamil Nadu Police issued a warning on Saturday (Nov. 7) stating that strict action will be taken against those who engage in bike stunts.