பெட்ரோல் மாதிரிகளில் எத்தனால் அளவு 31 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருப்பதாக கர்நாடக அமைச்சர் குற்றஞ்சாட்டியிருப்பதோடு, எண்ணெய் நிறுவனங்களில் ஆய்வு நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.நாடு முழுவதும் ஏற்கனவே இ20 என்ற எத்தனால் கலந்த பெட்ரோல், பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திவரும் நிலையில், கர்நாடக அரசு வெளியிட்டிருக்கும் தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.முன்னதாக, பெட்ரோலில் எத்தனால் அளவை உயர்த்தும் எண்ணமில்லை என்று மத்திய அரசு கடந்த மாதம் இறுதியில் உறுதியளித்திருந்த நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் சேகரிக்கப்பட்ட பெட்ரோல் மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், பல மாதிரிகளில் எத்தனால் அளவு 20 சதவீதத்திற்கு மேல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, இதில் அதிகபட்சமாக 31.2 சதவீதம் வரை எத்தனால் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் கர்நாடக அரசு குற்றஞ்சாட்டியிருக்கிறது.கர்நாடக அரசு நடத்திய சோதனைகளில் கிடைத்த தரவுகளை வெளியிட்டுள்ளத. அதில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் விற்பனை நிலையத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரியில் 31.2 சதவிகிதம் எத்தனால் இருப்பது கண்டறியப்பட்டது. அதேபோல், எச்பிசிஎல் பெட்ரோல் நிலையங்களின் மாதிரிகளில் முறையே 30.5 சதவிகிதம் மற்றும் 27 சதவிகிதம் எத்தனால் பதிவாகியுள்ளது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிலையங்களிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் 26.5 சதவிகிதம், 24.2 சதவிகிதம் மற்றும் 22.6 சதவிகிதம் அளவுகளும், நயாரா எனர்ஜி பெட்ரோல் நிலைய மாதிரிகளில் 26.1 சதவிகிதம் அளவும், ஷெல் (Shell) மாதிரிகளில் 25.5 சதவிகிதம் அளவும் எத்தனால் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கர்நாடக அரசு மாநிலம் முழுவதும் சுமார் 63 பெட்ரோல் நிலையங்களிலிருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்குள்படுத்தியதாகவும் கூறியிருக்கிறது. முதலில், அந்தந்த எண்ணெய் நிறுவனங்களில் தரக் குறியீட்டு ஆய்வகங்களுக்கே ஆய்வுக்கு அனுப்பி முடிவுகளைக் கேட்டபோது, அவை உரிய பதில்களை அளிக்காததால், சந்தேகத்தின் அடிப்படையில் தேசிய ஆய்வகத்துக்கு அனுப்பி முடிவுகளைப் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து சம்பந்தப்பட்ட பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் விளக்கம் இதுவரை வெளியாகவில்லை. Up to 31% ethanol in petrol samples! Allegation by Karnataka Minister