தில்லி தலைமையின் உத்தரவா? மாநில உரிமைகள் மீது தவெக அரசுக்கு அக்கறை இல்லை! கனிமொழி

Wait 5 sec.

தமிழ் மக்களின் மீதும் மாநில உரிமைகள் மீதும் தவெக அரசுக்கு அக்கறை இல்லை என திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கூறியுள்ளார். மத்திய - மாநில உறவுகளை ஆய்வு செய்வதற்காக நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் முந்தைய திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை தவெக அரசு ரத்து செய்ததற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் குறிப்பாக திமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, சென்னையில் செய்தியாளர்களுடன் பேசுகையில், "முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்திலும் மத்திய - மாநில அரசு இடையே உள்ள உறவு குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டு அவர்கள் அளித்த அறிக்கையைப் பயன்படுத்தி நம் மாநில உரிமைகளைப் பெற்றிருக்கிறோம். மு.க. ஸ்டாலின் ஆட்சி காலத்திலும் இது தொடர்கிறது. சிலரை மகிழ்ச்சிப்படுத்தவும் தங்களின் பயத்தின் காரணமாகவும் குரியன் குழுவை கலைத்திருக்கிறார்கள். தமிழ் மக்களின் மீதும் மாநில உரிமைகள் மீதும் தவெக அரசுக்கு அக்கறை இல்லை. கவலை இல்லை. மத்திய பாஜக அரசை எதிர்த்து கேள்வி கேட்க தவெகவுக்கு திராணி இல்லை என்பது இதன் மூலமாக தெளிவுப்படுத்தியிருக்கிறார்கள்" என்று பேசினார். முன்னதாக தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கவும் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் உரிமைப் போராட்டத்திற்கு வழிகாட்டும் வகையிலும் திமுக ஆட்சியில் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட மத்திய - மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவைத் தவெக அரசு கலைத்திருப்பது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே இந்தக் குழு மத்திய - மாநில உறவுகள் குறித்த தங்களது ஆய்வறிக்கையின் முதல் பாகத்தைச் சமர்ப்பித்துவிட்ட நிலையில், குழுவின் பணி முழுமையாக நிறைவடைவதற்கு முன்பே கலைப்பதற்கான அவசியம் என்ன? மாநில சுயாட்சிக் கொள்கையின் மீதான வெறுப்பா? இல்லை தில்லி தலைமையின் உத்தரவா? மாநில தன்னாட்சி உரிமையைப் பாதுகாப்போம் என்று வசனம் பேசிக்கொண்டே மாநில சுயாட்சிக்குக் குழிபறித்திருக்கிறது தவெக அரசு. இந்தியாவில் கூட்டாட்சி அரசியலை வலுப்படுத்துவதற்கான தமிழ்நாட்டின் முன்னெடுப்பைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது" என்று பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கவும் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் உரிமைப் போராட்டத்திற்கு வழிகாட்டும் வகையிலும் கழக ஆட்சியில் மாண்புமிகு நீதியரசர் திரு. குரியன் ஜோசப் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவைத் தவெக அரசு கலைத்திருப்பது…— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) November 7, 2026TVK shows no concern for state rights: Kanimozhiஅனைத்து விவசாயிகளுக்கும் ரூ. 75,000 பயிர்க்கடன் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்பு