இ20 பெட்ரோல் இப்போது 420 ஆக மாறிவிட்ட மாக மத்திய அரசை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். கர்நாடகத்தில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் எத்தனால் கலப்பு 31.2 சதவீதம் வரை இருப்பதாக அந்த மாநில அரசு வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ராகுல் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், இ20 பெட்ரோல் தற்போது 420 ஆக மாறிவிட்டது. பொதுமக்களின் வாகனங்களிலிருந்து பெட்ரோல் திருடப்படுகிறது. பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனால் கலக்கப்படுவதாகப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், கர்நாடகத்தின் 7 மாவட்டங்களில் இருந்து பெட்ரோல் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்தது. இதில் 14 மாதிரிகளில் 11 மாதிரிகளில் எத்தனால் கலப்பு 20 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது. இதன் மூலம், வாகன ஓட்டிகள் அதிக விலை கொடுத்து பெட்ரோல் வாங்கினாலும், அவர்களது வாகனங்களில் எத்தனால் அதிகளவில் நிரப்பப்படுவது தெரிய வந்துள்ளது. பெட்ரோல் நிலையங்களிலும் இதுகுறித்த விவரங்கள் குறிப்பிடுவதில்லை. நமது வாகனங்களில் நிரப்பப்படும் எரிபொருள் என்ன என்பதைப் பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும். பெட்ரோலில் எத்தனை சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது? 20 சதவீதத்துக்கும் அதிகமாக எத்தனால் கலக்கும் பெட்ரோல் நிறுவனங்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்? பொதுவெளியில் என்னுடன் விவாதிக்க விடுத்த சவால் என்ன ஆனது? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தீபாவளியன்று கங்கா ஸ்நானம் செய்வது ஏன்? உகந்த நேரம் என்ன?