தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு ரூ. 45,000 வரை ஊக்கத்தொகை! ரூ. 198 கோடி ஒதுக்கீடு

Wait 5 sec.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அலுவலர்களுக்கு ஒரு மாத அடிப்படை சம்பளம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு ரூ. 198 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி தேர்தல் நடத்தும் மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், பிற அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 45,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியர்களின் நேர்முக உதவியாளர் மற்றும் சிறப்பு வட்டாட்சியர்கள் ஆகியோருக்கு, ஒரு மாத அடிப்படை ஊதியம் அல்லது அதிகபட்சம் ரூ. 45,000 வரை வழங்கப்படும். இதில் எது குறைவோ அது வழங்கப்படும். அதேபோல, மாவட்ட தேர்தல் அலுவலக பிரிவில் பணியாற்றிய அலுவலர்கள், ஊழியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், மாநகராட்சி / நகராட்சி ஆணையர்கள். - பறக்கும் படை / வீடியோ கண்காணிப்பு குழு, கணக்கு குழு, நடத்தை விதிமுறை குழு, உதவி செலவின பார்வையாளர்கள், கண்காணிப்பு குழு, மண்டல உதவியாளர்கள் ஆகியோருக்கு அதிகபட்சமாக ரூ. 30,000, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள், நோடல் அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், ஆட்சியர் அலுவலக வருவாய் பிரிவில் தேர்தல் பணியாற்றிய பிற பிரிவினருக்கு அதிகபட்சமாக ரூ. 20,000 ஊக்கத்தொகை கிடைக்கும். இதற்காக ரூ. 198 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. Incentives of up to Rs. 45,000 for govt employees who worked on election dutyஅனைத்து விவசாயிகளுக்கும் ரூ. 75,000 பயிர்க்கடன் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்பு