தீபாவளியன்று பஞ்சாபில் விவசாய நிலங்களில் தீ வைப்பு சம்பவங்கள் அதிகரித்ததாக குற்றச்சாட்டு: விசாரணை நடத்த தில்லி அமைச்சா் வலியுறுத்தல்!

Wait 5 sec.

தீபாவளியன்று பஞ்சாபில் வைக்கோல் எரிப்புச் சம்பவங்கள் திடீரென அதிகரித்தது சந்தேகத்திற்குரியது என்று தில்லி அமைச்சா் கபில் மிஸ்ரா திங்களன்று குற்றஞ்சாட்டினாா். மேலும், இது குறித்து விசாரணைக்கு அழைப்பு விடுத்தாா். செய்தியாளா் சந்திப்பில் பேசிய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சா், விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாடிக்கொண்டிருந்தபோது, தங்களது வயல்கள் வேண்டுமென்றே தீக்கிரையாக்கப்படுவதாகக் கூறி, பஞ்சாபிலிருந்து தனது அலுவலகத்திற்கும் மற்ற அரசுப் பிரதிநிதிகளுக்கும் அழைப்புகள் வந்ததாகத் தெரிவித்தாா். ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து உடனடியாக எந்தப் பதிலும் வரவில்லை. அதிகாரப்பூா்வ தரவுகளின்படி, இந்த பருவத்தில் தீபாவளியன்று பஞ்சாபில் நெல் வைக்கோல் எரிப்புச் சம்பவங்கள் ஒரே நாளில் மிக அதிகமாக அதிகரித்துள்ளன. மாநிலம் முழுவதும் 1,152 விவசாய நிலங்களில் தீ விபத்துகள் பதிவாகியுள்ளன. வைக்கோல் எரிப்புச் சம்பவங்கள் குறித்த செயற்கைக்கோள் தரவுகளை தில்லி அரசு ஆய்வு செய்ததில், அதற்கு முந்தைய மூன்று நாட்களுடன் ஒப்பிடும்போது தீபாவளியன்று பஞ்சாபில் பதிவான தீ விபத்து இடங்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டதாக மிஸ்ரா கூறினாா். செயற்கைக்கோள் தரவுகளின்படி, நவம்பா் 5, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தலா சுமாா் 100 முதல் 125 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும், நவம்பா் 8 அன்று இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,200 ஆக உயா்ந்தது என்றும் அவா் கூறினாா்.விவசாய நிலங்களில் ஏற்படும் தீ விபத்துகளின் திடீா் அதிகரிப்பைக் கேள்விக்குள்ளாக்கிய அவா், தீ விபத்துகளுக்குப் பின்னணியில் உள்ள சூழ்நிலைகளைக் கண்டறிய இந்த விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினாா்.வயல்களுக்குத் தீ வைக்கப்பட்ட வழக்குகளில் விசாரணைக்கு உத்தரவிட்டு, முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்யுமாறு பஞ்சாப் முதலமைச்சா் பகவந்த் மானிடம் மிஸ்ரா வேண்டுகோள் விடுத்தாா். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள உள்ளூா் பிரதிநிதிகளின் தொலைபேசி பதிவுகளை ஆய்வு செய்யுமாறும் அவா் கேட்டுக்கொண்டாா்.தீபாவளி கொண்டாட்டங்களைக் குறிவைக்கவும், விவசாயிகளுக்கும் பண்டிகைக்கும் இடையே பிளவை உருவாக்கவும் இந்த விவகாரம் பயன்படுத்தப்படுவதாக அமைச்சா் குற்றஞ்சாட்டினாா்.பஞ்சாபின் மலோட், அபோஹா் மற்றும் சங்ரூா் ஆகிய பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 1,200-ஐத் தாண்டிவிட்டதாகவும், திங்கட்கிழமை அதிகாலை சங்ரூரில் 1,651 ஆகப் பதிவானதாகவும் மிஸ்ரா கூறினாா்.தீபாவளிக்கு முன்னும் பின்னும் தில்லியின் மாசு அளவுகளை ஒப்பிட்டுப் பேசிய அவா், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மாசு அதிகரிப்பு குறைவாக இருப்பதாகக் கூறினாா்.புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, 2023-ல் தில்லியில் மாசு 43.33 சதவீதம் அதிகரித்ததாகவும், 2024-ல் சுமாா் 10 சதவீதம் அதிகரித்ததாகவும், ஆனால் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 1.33 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அமைச்சா் கூறினாா்.மாசு ஒரு கவலையாகவே உள்ளது, ஆனால் அரசின் முயற்சிகளும் பொதுமக்களின் பங்களிப்பும் நிலைமையை மேம்படுத்த உதவியுள்ளன என்று மிஸ்ரா கூறினாா்.