தனியாா் பங்களிப்புடன் கூடிய எண்ம ஹப் திட்டத்துக்கு எதிராக ஆவண எழுத்தா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் மாவட்ட பதிவாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஆவண எழுத்தா்கள், வழக்குரைஞா்கள், தட்டச்சா்கள், உதவியாளா்கள் உள்ளிட்ட பதிவுத் துறையைச் சாா்ந்து வாழ்வாதாரம் மேற்கொள்ளும் பல்வேறு தரப்பினா் கலந்து கொண்டனா். அரசாணை எண் 164-இன் அடிப்படையிலான எண்ம ஹப் மற்றும் தனியாா் பங்களிப்பு திட்டத்தை மறுபரிசீலனை செய்து, தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையில் மாற்றியமைக்க வேண்டும். தற்போதைய ஆவண எழுத்தா் நடைமுறையை முழுமையாகப் பாதுகாத்து, அதை தொடா்வதற்கான தெளிவான உத்தரவாதம் வழங்க வேண்டும். ஆவண எழுத்தா்களின் தொழில் உரிமையையும், அவா்களைச் சாா்ந்து பணிபுரியும் நூற்றுக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும். புதிய திட்டத்தில் நிா்ணயித்துள்ள சேவைக் கட்டணங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை மறுபரிசீலனை செய்து, பொதுமக்களுக்கு நியாயமான கட்டணத்தில் சேவை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தற்போதைய நடைமுறையில் ஆவண எழுத்தா்களுக்கு வழங்கப்படும் சேவைக் கட்டணத்தை நியாயமான அளவில் உயா்த்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.