மிளகு வடை - (திருப்பதி ஸ்பெஷல்)

Wait 5 sec.

தேவையான பொருள்கள்:கருப்பு உளுந்து- 300 கிராம்மிளகு, சீரகப் பொடி-தலா 1 தேக்கரண்டிஉப்பு, எண்ணெய்- தேவையான அளவு செய்முறை:முதலில் ஒரு பாத்திரத்தில் 300 கிராம் கருப்பு உளுந்தை எடுத்து தண்ணீர் ஊற்றி 12 மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் நன்றாக அலசி விட்டு, தண்ணீர் இல்லாமல் மிக்ஸியில் போட்டு கட்டியாக அரைத்து எடுக்கவும். இப்போது அதில் மிளகு, சீரகப் பொடி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து எடுத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்கக் கூடாது. ஒரு பட்டர் ஷீட்டில் சிறிது எண்ணெய் தடவி விட்டு எலுமிச்சைப் பழம் அளவுக்கு மாவை எடுத்து அந்த பட்டர் ஷீட்டில் வைத்து தட்டவும். முடிந்த அளவிற்கு மெலிதாக தட்டவும். பிறகு தட்டிய மாவை எடுத்து மிதமான சூட்டில் இருக்கும் எண்ணெயில் போடவும். எண்ணெய் மிகவும் சூடாக இருக்கக் கூடாது, மிதமான சூட்டிலேயே வைத்திருக்க வேண்டும். இருபக்கமும் சிவக்க எடுக்கவும். சுவையான மிளகு வடை ரெடி.நாகஜோதி கிருஷ்ணன்