சென்னை, புறநகர்ப் பகுதிகளில்விடிய விடிய கனமழை!

Wait 5 sec.

சென்னை, புறநகர்ப் பகுதிகளில் இன்று (நவ. 8) அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியில் நிலவும் காற்று இடையூறு காரணமாக இன்று (நவ. 8) தஞ்சாவூா், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை, திருவள்ளூர் உள்பட ஏனைய தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது.இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. அம்பத்தூர், பாடி, கோயம்பேடு, வடபழனி, அசோக்நகர், பேசின்பாலம், பாரிமுனை, கிண்டி, தியாகராய நகர், நுங்கம்பக்கம், எழும்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.மேலும் தாம்பரம், செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்பட புறநகர்ப் பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. இன்று தீபாவளி திருநாள் என்பதால் பொருள்களை வாங்க வெளியே செல்பவர்களுக்கும் வாகனஓட்டிகளுக்கும், இந்த மழையானது சற்று இடையூறை ஏற்படுத்தியுள்ளது.Heavy rain has been falling in Chennai and its suburban areas since early this morning (Nov. 8).பலத்த மழை: ராமநாதபுரம் சாலைகளில் தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் அவதி