புதுதில்லி: தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், பொதுமக்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்டி வந்த நிலையில், பண்டிகையை முன்னிட்டு, தில்லியில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.2,500 குறைந்து ரூ.1.46 லட்சமாக சரிந்தது.அகில இந்திய சாராஃபா சங்கத்தின் படி, 99.9 சதவீதம் தூய்மையான தங்கம், நேற்றைய முடிவில் 10 கிராமுக்கு ரூ. 1,48,800 ஆக இருந்த நிலையில் இருந்து ரூ. 2,500 சரிந்து 10 கிராமுக்கு ரூ. 1,46,300 ஆக குறைந்தது.வெள்ளியின் விலையும் நேற்றைய முடிவில் கிலோவுக்கு ரூ. 1,94,500 ஆக இருந்த நிலையில் இருந்து ரூ. 2,000 சரிந்து கிலோவுக்கு ரூ. 1,92,500 ஆக குறைந்தது.கடந்த வருடம் அக்டோபர் 18 ஆம் தேதியன்று 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1,32,400 ஆகப் பதிவாகியிருந்தது. தற்போது தங்கத்தின் விலை அதைவிட அதிகமாகவே உள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு இதே நாளில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,70,000 ஆக இருந்தது.உலக தங்க கவுன்சிலின் தகவலின் அடிப்படையில், செப்டம்பர் வரையான காலாண்டில் இந்தியாவில் தங்க நகைகளுக்கான தேவை 20 சதவீதம் சரிந்துள்ளது. அதே நேரத்தில் அதன் மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு 16 சதவீதம் உயர்ந்துள்ளது.சர்வதேச சந்தையில், ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 20.41 டாலராக சரிந்து 4,068.71 ஆக உள்ளது. இருப்பினும் வெள்ளி விலை அவன்ஸ் ஒன்றுக்கு 52 டாலர் என்ற அளவில் சற்றே உயர்நது வர்த்தகமானது.Gold prices in the national capital declined by Rs 2,500 to Rs 1.46 lakh per 10 grams on Friday.டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!