திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு!

Wait 5 sec.

திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் உள்பட 24 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை, அமலாக்கத்துறை இயக்குநரகம் மற்றும் தமிழ்செல்வன் மற்றும் அறப்போர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசன் ஆகியோர்களிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் தலைமையகக் குற்ற எண்.08/2026 ன் படி முன்னாள் நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன், .ஏ.முத்தையா, முதன்மை தலைமை பொறியாளர் (ஓய்வு), ராமமூர்த்தி, முதன்மை தலைமை பொறியாளர் (ஓய்வு) மற்றும் நீர்வளத் துறையைச் சேர்ந்த 14 அரசு ஊழியர்கள், 10 தனியார் நபர்கள்/ நிறுவனங்கள் மற்றும் பல நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.2021 முதல் 2024 வரையிலான இடைப்பட்ட காலகட்டத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள 28 குவாரிகளில் ஆற்று மணல் எடுக்கும் பணிகளில் ஊழலும் முறைகேடுகளும் நடைபெற்றுள்ளதாகவும், பணிகளில் வெளிப்படையான டெண்டர் முறைக்கு பதிலாக வரையறுக்கப்பட்ட டெண்டர் மூலம் ஒப்பந்தங்களை வழங்கி, கனிம திட்டத்தின் வரைமுறைகளுக்கு அப்பாற்பட்டு, மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் கூடுதலாக சட்ட விரோதமாக ஆற்று மணல் எடுத்தும், அனுமதிச் சீட்டு என்ற பெயரில் பற்றுச் சீட்டுகளை போலியாக தயாரித்து அவற்றை உண்மையானவை போல பயன்படுத்தி, மொத்தம் உள்ள 28 குவாரிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட 4 குவாரிகளில் ஆற்று மணலை கொள்ளையடித்து, அதன்மூலம் அரசுக்கு ரூ.1427,34,23,059/- வருவாய் இழப்பினை ஏற்படுத்தியதாக புகார்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.விசாரணையின் ஒரு பகுதியாக, இன்று சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், வேலூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 34 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு, வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய 825 குற்றத்தை நிரூபிக்கும் ஆவணங்களும், 11 மின்னணு சாதனங்களும் மற்றும் 3 வங்கி லாக்கர் சாவிகள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. The Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) has registered a case against senior DMK leader and former minister Durai Murugan, along with 23 others.பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றிய திமுக உயர் ரகம்தான்! முதல்வர் விஜய் கண்டனம்