பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் ஊழல்! விசாரணை தொடக்கம்!

Wait 5 sec.

பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்ட நிலையில், தமிழக அமைச்சர் ராஜ்மோகன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.கோவையில் பெரியார் அறிவுலகம் கட்டும் பணிகள் கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யால் கடந்த அக். 16 அன்று திறந்துவைக்கப்பட்டது.இந்த நிலையில், பெரியார் அறிவுலகத்தை பார்வையிட்ட எழுத்தாளர் பெருமாள் முருகன், புத்தகங்கள் வாங்கியதில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாக கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.அதில், யாரும் அறியாத ‘அகல் விளக்கு’ என்ற பதிப்பகத்தின் பெயரில் அச்சிடப்பட்ட 1,800 புத்தகங்கள் வாங்கப்பட்டிருப்பதாகவும், நாலடியார் நூல்களை மற்ற பதிப்பகங்கள் ரூ. 350-க்கு விற்கும் நிலையில், சூர்யா பாலு என்ற பெயரில் எழுதப்பட்ட ’நாலடியார் வாழ்வின் வழிகாட்டி’ என்னும் முந்நூறு பக்க நூலை ரூ. 1,445 வாங்கியிருப்பதாகவும் அந்த கட்டுரையில் எழுத்தாளர் பெருமாள் முருகன் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சர் ராஜ்மோகன், எழுத்தாளர் பெருமாள் முருகனின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பது தொடர்பாக பேசினார்.அவர் பேசியதாவது:”கோவையில் பெரியார் அறிவுலகம் திறந்து வைக்கப்பட்டது. பெரியார் அறிவுலத்தில் ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார். அதை படிக்கும்போதும் ஒரு பக்கம் வேதனையாகவும் ஒரு பக்கம் சிரிப்பாகவும் இருந்தது.நானும் ஒரு வாசகர் தான். அந்த பெரியார் அறிவுலகத்திலிருக்கும் புத்தகத்தின் பெயர்கள் எல்லாம் என் வாழ்நாளிலேயே கேள்விப்பட்டதில்லை. அதில் ஒரு பதிப்பகத்தில் 1,500 நூல்கள் வாங்கியுள்ளனர். அப்படியொரு பதிப்பகம் செவ்வாய் கிரகத்திலேயே இல்லை. கடந்த ஆட்சியில் பிப்ரவரி மாதமே புத்தகங்களை வாங்கியுள்ளனர். இது திமுக ஆட்சியில் நடந்திருக்கும் மெகா ஊழலின் எடுத்துக்காட்டு. பெரியார் பெயரிலேயே ஊழல் செய்தது வெட்கமாக இல்லையா? அதில் யாரென்றே தெரியாத ஒரு எழுத்தாளர் பெயரில் கீழடி குறித்து புத்தகம். அதில், கீழடியிலிருந்து எடுக்கப்பட்ட புத்தகம் என்று கூகுளிலில் இருந்து படங்களை எடுத்துள்ளனர். அப்படியொரு சிலையே கீழடியில் இல்லை.பாரதியாரின் கதைகள் என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளனர். நல்லவேளை அந்த கதையெல்லாம் படிக்காமல் பாரதியார் இறந்துவிட்டார். பத்தாம் வகுப்பு மாணவர்கூட நன்றாக எழுதுவார்.இந்த ஊழல் தொடர்பான விசாரணை தொடங்கப்படுகிறது. யாரெல்லாம் சம்பந்தப்பட்ட இருக்கிறார்களோ, அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.Corruption in the purchase of books for the Periyar Arivulagam - Investigation beginsமாமல்லபுரம் அருகே அரசுப் பேருந்து மீது வேன் மோதல்! இருவர் பலி, 8 பேர் கவலைக்கிடம்!