தமிழ்நாட்டில் விஜய் அமைச்சரவை பதவியேற்ற சுமார் ஒரு வாரத்திற்குப் பின்பே அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் 10 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ள நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் எப்போது என்ற எதிர்பார்ப்பு நீடிக்கிறது. இதுபற்றி தவெக என்ன சொல்கிறது? விஜய் அரசில் உள்ள அனுபவமற்ற புதிய அமைச்சர்கள் முன்னுள்ள சவால்கள் என்ன?