16 வது நாளாக சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்; கண்டுகொள்ளாத பாஜக! சிஜேபி குற்றச்சாட்டு!

Wait 5 sec.

நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டைக் கண்டித்து தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் சார்பில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் தேர்வுக்கு முன்னதாகவே கசிந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நாட்டின் பல பகுதிகளில் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.இதைத் தொடர்ந்து, நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் தில்லியின் ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்தப் போராட்டத்தில், லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த ஜூன் 28 தொடங்கி இன்று வரை 16 வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.இதுகுறித்து கரப்பான்பூச்சி மக்கள் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:அண்ணா ஹசாரே தனது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை வெறும் 11 நாள்களில் முடித்துக்கொண்டார். காங்கிரஸ் அரசு அவருக்குப் பணிய வேண்டியிருந்தது.சோனம் வாங்சுக் கடந்த 15 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால், பாஜக அரசு இதைக் கண்டுகொள்ளத் தயாராக இல்லை. சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்துக்கு தவறான அரசைத் தேர்ந்தெடுத்துவிட்டாரா? இங்கு ராஜிநாமாக்கள் நடப்பது இல்லையா? அரசு எங்கே இருக்கிறது? என்று குறிப்பிட்டுள்ளது.இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் நிறுத்தப்படுகிறதா? பியூஷ் கோயல் மறுப்பு!A protest is ongoing at Jantar Mantar in Delhi, organized by the Karappanpoochi Makkal Katchi, to condemn the irregularities in the NEET examination.