தமிழர் பண்பாட்டில் தாமரை

Wait 5 sec.

தமிழர் பண்பாட்டில் தாமரை- சாத்தான்குளம் அ. இராகவன்; பக். 216; ரூ. 230; ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை - 600 017, ✆ 044- 2433 1510.தமிழர்களின் பண்பாடு, இலக்கியம், ஆன்மிகம் மற்றும் அன்றாட வாழ்வில் தாமரை மலர் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தனித்துவமான அழகாலும், தூய்மையாலும் மனித வாழ்வியலுக்குப் பெரும் தத்துவங்களை உணர்த்தும் மலராக தாமரை திகழ்கிறது.'தமிழர் பண்பாட் டில் தாமரை' என்ற இந்த நூலில், தாமரையின் சிறப்பு, காவியத்தில், இலக்கியங்களில் பெறும் இடம், சமய நெறி, பண்பாடு, ஓவியம், கோலங்களில் தாமரை மாட்சி, தாமரைக் காசு, தத்துவத்தின் அடிப்படையில் தாமரை, மருத்துவத்தில் தாமரை மாட்சி, தாமரை வடிவில் தமிழக நகரமைப்பு, நாட்டியக் கலை, தமிழிசையில் தாமரை என 25 தலைப்புகளில் தாமரை மலர் குறித்து அறியாத பல தகவல்கள் விரிவாகப் பேசப்பட்டுள்ளன.சங்க இலக்கியங்கள் தாமரை மலரை மிக உன்னதமாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. செந்தாமரை, வெண்தாமரை (அம்பல்) எனப் பரவலாகப் பேசப்படுகின்றன. பெண்களின் முகம், கண்கள், உள்ளங்கை, உள்ளங்கால்களுக்கு தாமரை மலர் உவமையாகக் கூறப்பட்டுள்ளது.மருத நிலத்தின் முதன்மை அடையாளமாக தாமரை மலரே திகழ்ந்தது. நீர்நிலைகளில் தாமரை மலர்ந்திருப்பது நாட்டின் செழிப்பைக் குறிப்பதாகப் புலவர்கள் பாடியுள்ளனர்.திருமால், பிரம்மன், கலைமகள், அலைமகள் ஆகிய தெய்வங்களின் இருப்பிடமாகவும், அவர்கள் கைகளில் ஏந்தும் மலராகவும் தாமரை விளங்குகிறது. இறைவனின் திருவடிகளை 'மலரடி' என்று போற்றுவது தமிழ் மரபு. 'மனிதர்கள் பற்று அற்றவர்களாக (தாமரை இலைத் தண்ணீர் போல) வாழ வேண்டும்' என்ற உன்னத தத்துவத்தைத் தமிழ் ஞானிகளும் சித்தர்களும் போதித்தனர்.