நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கருப்பு திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா விஸ்வநாதன் அண்ட் சன்ஸ், சூர்யா - 47 ஆகிய படங்களில் ஒப்பந்தமானார். இதில், வெங்கட் அட்லுரி இயக்கிய விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.சூர்யா தன் 47-வது படமாக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது முழுமையாக நிறைவடைந்ததாக விடியோ வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. It's a wrap for #Suriya47. ♂️ See you in theatres with The One, @Suriya_offl. #JithuMadhavan #NazriyaFahadh @naslen__ @sushintdt @2D_ENTPVTLTD @Netflix_INSouth#S47 pic.twitter.com/oUTnVf0vWc— Zhagaram Studios (@ZhagaramOffl) July 16, 2026 சூர்யாவே தன் ழகரம் தயாரிப்பு மூலம் தயாரித்த இப்படத்தில் அவர் காவல் அதிகாரியாக நடிப்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆவேசம் பாணியில் இது இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஒடிசி பார்க்கப் போகிறீர்களா? காவியத்தின் கதை இதுதான்! தெரிந்துகொள்ளுங்கள்! Filming for actor Suriya's 47th movie has been completed.