அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை ஈரானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் கூட்டுத் தாக்குதலில் கடந்த பிப். 28 அன்று ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இருதரப்புக்கும் இடையே போர் வெடித்ததால் சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு அவரது உடல் கடந்த ஜூலை 9 அன்று அடக்கம் செய்யப்பட்டது. இத்துடன், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தை அதிபர் டிரம்ப் ரத்து செய்ததுடன் மீண்டும் ஈரானின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஏற்கெனவே, கமேனியின் கொலைக்கு நிச்சயம் பழித்தீர்ப்போம் என ஈரானின் புதிய தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி அறிவித்திருந்தார். மேலும், கமேனியின் இறுதிச்சடங்கில் அமெரிக்கா மற்றும் அதிபர் டிரம்ப்புக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிலையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமியப் புரட்சி சதுக்கத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உடல் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்று சித்தரிக்கப்பட்ட மிகப்பெரிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதாகையின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருவதால், சர்வதேச அமைப்புகள் மற்றும் பல்வேறு நாடுகளின் கண்டனங்களை இந்தப் பதாகை பெற்றுள்ளது. உக்ரைனின் புதிய பிரதமராக செர்ஹி கோரெட்ஸ்கி தேர்வு!A banner displayed in Iran, depicting US President Donald Trump in a coffin, has drawn international attention.