19வது நாளாக உண்ணாவிரதம்! சோனம் வாங்சுக்கின் போராட்டத்துக்கு அரவிந்த் கேஜரிவால் ஆதரவு!

Wait 5 sec.

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் ஆதரவு தெரிவித்துள்ளார். நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சி மற்றும் லடாக்கைச் சேர்ந்த ஆர்வலர் சோனம் வாங்சுக் இணைந்து கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். தில்லியில் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில், கடந்த ஜூன் 29 அன்று முதல் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் கடைபிடித்து வருகிறார். 19 வது நாளாக இன்றும் (ஜூலை 16) சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதம் தொடர்வதால் அதை முடிவுக்குக் கொண்டுவரும்படி ஏராளமான அரசியல் தலைவர்கள் அவருக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், தில்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் இன்று மாலை நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, சோனம் வாங்சுக் மற்றும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினரின் போராட்டத்துக்கு சமாஜ்வாதி, இந்திய கமயூனிஸ்ட் கட்சி, திரிணமூல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும், நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ஸ்வரா பாஸ்கர், சாயாஜி ஷிண்டே உள்ளிட்ட ஏராளமானோர் ஆதரவளித்துள்ளனர். புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: 100 பேர் காயம்!Arvind Kejriwal has extended his support to Sonam Wangchuk's hunger strike against the NEET question paper leak.