இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 80 ரன்கள் எடுத்திருக்கையில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பெவிலியன் திரும்பினார்.இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி எட்ஜ்பாஸ்டனில் இன்று (ஜூலை 14) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 258 ரன்கள் எடுக்க, 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.பெவிலியன் திரும்பிய ஷுப்மன் கில்!இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் களமிறங்கினர். ரோஹித் சர்மா 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, விராட் கோலி 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 48 ரன்களுக்கே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.இந்த நிலையில், கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தது. கேப்டன் ஷுப்மன் கில் அதிரடியாக விளையாட, ஷ்ரேயாஸ் ஐயர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.கேப்டன் ஷுப்மன் கில் 75 பந்துகளில் 80 ரன்கள் எடுத்திருக்கையில் அவரது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் ரிட்டையர்டு ஹர்ட் ஆகி பெவிலியன் திரும்பினார். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இங்கிலந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியது.ஷ்ரேயாஸ் ஐயர் 35 ரன்களில் ரன் அவுட் ஆனார். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் ஷ்ரேயாஸ் ஐயரை ரன் அவுட் ஆக்கினார். அவரைத் தொடர்ந்து, கே.எல்.ராகுல் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். குறுகிய இடைவெளியில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.ஷுப்மன் கில்லுக்கு வெறும் தசைப்பிடிப்பு என்று கூறப்படுகிறது. அவருக்கு காயம் ஏற்பட்டிருந்தால், அது இந்திய அணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தக் கூடும். Indian team captain Shubman Gill returned to the pavilion after scoring 80 runs in the first ODI against England.இங்கிலாந்து ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட பிரண்டன் மெக்கல்லம்!