டாம் க்ரூஸ் படத்திலிருந்து விலகிய ஃபகத் பாசில்! காரணம் என்ன?

Wait 5 sec.

டாம் க்ரூஸ் நடிப்பில் அலெஜாண்ட்ரோ ஜி. இனர்ரிட்டு இயக்கிய டிக்கர் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இப்படத்தில் பிரிட்டன் நடிகர் ரிஸ் அகமது ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் ஃபகத் பாசிலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அவர் பேசியது வைரலாகி வருகின்றது.கடந்தாண்டு வெளியான ஒரு நேர்காணலில் இதுபற்றிப் பேசிய ஃபகத் பாசில் இந்தப் படத்திலிருந்து விலகியது பற்றிப் பேசியுள்ளார். அதில், “அவர் என்னை நிராகரித்துவிட்டார் எனக் கூறமுடியாது. எனது உச்சரிப்பு பற்றிதான் அவர் அவர் யோசித்தார். எனது ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்த, நான் அமெரிக்கா சென்று அங்கு மூன்று அல்லது நான்கு மாதங்கள் தங்கியிருக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டது. ஆனால், அதற்கான செலவைத் தயாரிப்பு தரப்பினர் ஏற்க தயாராக இல்லை. அதனால் அந்த வாய்ப்பை நான் தவிர்த்துவிட்டேன். இல்லையென்றால், கண்டிப்பாக நான் ஓடியிருப்பேன். வணிகரீதியான அம்சங்கள் கைகூடியிருக்காது. ஆனால், எனது உச்சரிப்பிற்காக அவ்வளவு மெனக்கெட வேண்டும் என்ற உத்வேகம் எனக்கு ஏற்படவில்லை” என்று அவர் தெரிவித்திருந்தார்.ஃபகத் பாசில் மட்டுமின்றி ஹிந்தி நடிகர் வீர் தாஸும் இந்தப் பாத்திரத்திற்கு ஆடிஷன் சென்றதாகக் குறிப்பிட்டிருந்தார். தனது எக்ஸ் தளப் பதிவில், “இதற்காக நான் இரண்டு முறை ஆடிஷன் சென்றேன். அவர்கள் ரிஸ் அகமதுவைத் தேர்ந்தெடுத்துள்ளனர்” எனப் பதிவிட்டிருந்தார். A video of Fahadh Faasil talking about his exit from the film digger starring Tom Cruise is going viral.ரியோ நடிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் - 2?