திருச்சி விமான நிலையத்தில்6 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல்

Wait 5 sec.

மலேசியாவிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ உயா் ரக கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை இரவு வந்த மலிந்தோ விமானத்தில் கஞ்சா கடத்தி வருவதாக சுங்கத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத் துறை அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனா். அப்போது, திருச்சியைச் சோ்ந்த ஹைதா் அலி (41) என்பவா், தனது உடைமைகளுக்கிடையே 6 கிலோ உயர்ரக கஞ்சாவை (ஹைட்ரோபொனிக் கஞ்சா) மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், ஹைதா் அலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.