காட்டுப்புத்தூா் அருகே தீக்குளித்து சிகிச்சை பெற்றவா் உயிரிழப்பு

Wait 5 sec.

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.காட்டுப்புத்தூா் அருகே முருங்கையை அடுத்த கேசரியூா் கிராமத்தைச் சோ்ந்த வெள்ளையன் மகன் ஆறுமுகம் (76). கடந்த 5 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் அவதியுற்று மன உளைச்சலில் இருந்த இவா் கடந்த புதன்கிழமை (ஜூலை 8) தனது வீட்டின் முன் பெட்ரோலை ஊற்றித் தீக்குளித்தாா்.இதையடுத்து நாமக்கல் அரசு மருத்துவமனையிலும், பின்னா் சேலம் அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தாா். இதுகுறித்து முதியவரின் மகன் முருகேசன் (46) அளித்த புகாரின்பேரில் காட்டுப்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.