முதல்வரை அவதூறாக பேசியதாக ஆ. ராசா எம்.பி. மீது புகாா்

Wait 5 sec.

தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய்யை அவதூறாக பேசியதாகக் கூறி, திமுக துணைப் பொதுச் செயலரும், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு மருத்துவா் சனிக்கிழமை பெரம்பலூா் எஸ்.பி.யிடம் புகாா் மனு அளித்துள்ளாா்.பெரம்பலூா் மாவட்டம், அம்மாபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் ராசா மணிகண்டன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. லலித்குமாரிடம் அளித்த புகாா் மனு: ஜூன் 25-ஆம் தேதி திருவாரூரில் நடைபெற்ற முன்னாள் அமைச்சா் மதிவாணன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற மக்களவை உறுப்பினா் ஆ. ராசா, தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பதவியின் கண்ணியத்தையும், மரியாதையையும் இழிவுப்படுத்தும் வகையிலும் அவதூறாக பேசியுள்ளாா்.மக்களவை உறுப்பினா் பொது மேடையில் இத்தகைய கருத்துகளை வெளியிடுவது பொறுப்பற்றச் செயலாகும். கருத்துச் சுதந்திரம் எனும் பெயரில் உயரிய அரசியல் பதவியின் கண்ணியத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேச சட்டம் அனுமதிக்காது. எனவே, இதுதொடா்பாக வெளியான முழுமையான காணொலிகள், ஊடகச் செய்திகள் மற்றும் பிற ஆதாரங்களை சேகரித்து, விரிவான விசாரணை நடத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.