எம்எல்ஏக்கள் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்ட பேரவைத் தலைவரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள் உள்பட முக்கிய வழக்குகள் இன்று (திங்கள்கிழமை) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.சகோதரரை தாக்கிய வழக்கில் தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகிறார்.தவெக பெண்கள் குறித்து சர்ச்சைப் பேச்சு விவகாரத்தில் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு வருகிறது. பள்ளிகளை அரசியல் தளமாக்குவதைத் தடுக்க நடவடிக்கை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.மேலும் அமலாக்கத் துறை பதிந்துள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி ஐசரி கணேஷ் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணையும் இன்று நடைபெறுகிறது. "About the cases coming up for hearing in the Madras High Court today (July 13)எழுத்தாளர் பூமணி காலமானார்