டேராடூனில் கட்சி நிகழ்ச்சி ஏற்பாடுகளின்போது பலியான தொண்டரின் குடும்பத்தினரை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார். உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள பன்னு பள்ளி மைதானத்தில் மாணவர்களின் குரல் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலிலிருந்து இரும்புத் தடி ஒன்று விழுந்ததில் அமர் மேத்தா(65) வியாழக்கிழமை பலியானார். இந்த நிலையில் காங்கிரஸ் தொண்டரின் இல்லத்திற்கு வெள்ளிக்கிழமை சென்ற ராகுல் காந்தி, அவரது குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். இந்த தகவல் மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கோடியல் தெரிவித்துள்ளார்.முன்னதாக, டேராடூன் அருகிலுள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்திற்கு வந்தடைந்த ராகுல் காந்திக்குக் கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, பத்ரிநாத் ஆலயத்துடன் தொடர்புடைய பிர்ச் மரப்பட்டை கொண்டு செய்யப்பட்ட நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.மாணவர்களின் குரல் நிகழ்ச்சியின்போது, கல்வி, வேலைவாய்ப்பு, வினாத்தாள் கசிவு மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து ராகுல் காந்தி மாணவர்களுடன் கலந்துரையாடுவார் எனத் தெரிகிறது. Senior Congress leader Rahul Gandhi on Friday met the family of a party worker who died in a freak accident in Dehradun when preparations were underway for a party event.உகாண்டாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 20 குழந்தைகள் பலி