நடிகர் கிஷன் தாஸ் நாயகனாக நடித்துள்ள “சீ யூ” திரைப்படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. "முதல் நீ முடிவும் நீ" திரைப்படத்தில் நாயகனாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் நடிகர் கிஷன் தாஸ். யூடியூபர் ஹர்ஷத் கான் மற்றும் கிஷன் தாஸ் நடிப்பில் வெளியான “ஆரோமலே” படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.அறிமுக இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீவட்சன் இயக்கத்தில் “சீ யூ” எனும் புதிய படத்தில் நடிகர் கிஷன் தாஸ் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்துக்கு ஸெனம் இசையமைத்துள்ளார்.இந்த நிலையில், “சீ யூ” திரைப்படத்தின் முதல் கிளிம்ஸ் விடியோவை இன்று (ஜூலை 17) மாலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.மேலும், நடிகர்கள் சஞ்சனா, எம் எஸ் பாஸ்கர், அருண் குமார், அக்ஷயா, கார்த்திக் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். View this post on Instagram முதல்வர் விஜய்யின் ஜன நாயகன்! அடியே என் பூந்தேனே பாடல் வெளியானது! A glimpse video of the film "See You," starring actor Kishan Das as the lead, has been released.