லோகேஷ் கனகராஜ் தயாரித்துள்ள மிஸ்டர் பாரத் படத்தின் ரிலீஸ் தேதி!

Wait 5 sec.

தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ் தயாரித்த மிஸ்டர் பாரத் என்ற படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழில் வெற்றிபெற்ற இயக்குநராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் ஜி ஸ்குவாட் மூலம் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்து வருகிறார்.மிஸ்டர் பாரத் எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் நிரஞ்சன் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் இதில் யூடியூபர் பாரத், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன் நடித்துள்ளார்கள்.இந்தப் படத்தினை லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து சுதன் சுந்தரம், ஜகதீஷ் பழனிசாமி தயாரித்துள்ளார்கள். பிரணவ் முனிராஜ் இசையமைத்துள்ளார். போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் நடைபெற்றுவரும் நிலையில், படம் வரும் அக்.1ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புரோமோ விடியோவும் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. லோகேஷின் தயாரிப்பில் வெளியான முதல்படம் ஃபைட் கிளப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இந்தப் படம் வெற்றியைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.Release date of the movie Mr Bhaarath, produced by Lokesh Kanagaraj