இங்கிலாந்து ஓடிஐ தொடரிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்!

Wait 5 sec.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இந்திய அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகியுள்ளார்.இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி கார்டிஃபில் நேற்றிரவு நடைபெற்றது. இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்து முதலில் விளையாடி, 44 ஓவர்களில் 233 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதனைத்தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 44.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேலும், இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இவ்விரு அணிகளும் மோதும் தொடரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி வருகிற ஜூலை 19 ஆம் தேதி லார்ட்ஸ் திடலில் நடைபெறுகிறது.இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், காயம் காரணமாக மூன்றாவது போட்டியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில்52 ரன்கள் விளாசியிருந்த சுந்தர், இரண்டாவது போட்டியில் 5 பந்துகளில் 2 ரன்கள் அவுட்டானார். மேலும், தொடையில் ஏற்பட்ட அசௌகர்யத்துடன் அவர் காணப்பட்டார். அவர் அந்தப் போட்டியில் முதல் ரன்னை எடுக்க ஓடியபோது தசைநார் கிழிவால் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் அவர் மூன்றாவது போட்டியில் விளையாட மாட்டார் என்று இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் தெரிவித்துள்ளார்.In a big blow to the Indian cricket team, all-rounder Washington Sundar has reportedly been ruled out of the third and final ODI of the series against England. The decider will take place at Lord's, London, on Sunday.