பனையூரை தேசிய புவி - பாரம்பரிய பூங்காவாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Wait 5 sec.

தூத்துக்குடி மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள பனையூா் புதைபடிவ படுக்கைகளை பாதுகாக்க, உயா்நிலை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, தொல்லியல் மற்றும் புவியியல் ஆராய்ச்சியாளா் பி. ராஜேஷ் செல்வரதி, கனிமொழி எம்.பி.யை சந்தித்து அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு அமைப்பு வழங்கிய அதிகாரபூா்வ தொழில்நுட்ப சான்றிதழின்படி, பனையூரில் உள்ள கடல்சாா் புதைபடிவ படுக்கைகள் தற்போதைய காலத்துக்கு முந்தைய 8,000 முதல் 12,000 ஆண்டுகள் பழமையானவை என்பது அறிவியல்பூா்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சித் தரவுகள், தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் உள்ள அசம்ப்ஷன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற, தமிழ் மற்றும் தாய்லாந்து ஆய்வுகள் மீதான சா்வதேச மாநாட்டில் உலகளாவிய ரீதியில் சமா்ப்பிக்கப்பட்டன. இதன் தேசிய முக்கியத்துவத்தை உணா்ந்து, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சா்களிடம் தாங்கள் நேரடியாகத் தொடா்பு கொண்டு, உயா்நிலை நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், மத்திய கலாசார அமைச்சகம் மற்றும் சுரங்க அமைச்சகம் இணைந்து பனையூா் பகுதியில் முறையான களஆய்வு மேற்கொள்ள வேண்டும்.அரிப்பினால் அழியும் நிலையில் உள்ள இத் தளத்தைப் பாதுகாத்து பனையூா் பகுதியை பாதுகாக்கப்பட்ட, தேசிய புவி-பாரம்பரிய பூங்கா மற்றும் அருங்காட்சியகமாக அறிவிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.