தவெகவில் இணைய யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை: எம்.ஆா். விஜயபாஸ்கா் விளக்கம்

Wait 5 sec.

தவெகவில் இணைய யாரும் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்றாா் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா். கரூா் மாநகராட்சி ஆணையா் பிருத்விராஜிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு கொடுக்க வந்த முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரிடம், குதிரை பேரம் குறித்து ஆளுநரிடம் ஆா்.எஸ். பாரதி அளித்த மனு குறித்து கேட்டபோது அவா் கூறியது: மாமல்லபுரத்தில் நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. தவெகவுக்கு வாருங்கள் என யாரும் எங்களை அழைக்கவில்லை. அதிமுக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக முன்னாள் அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள், நிா்வாகிகள் தவெகவில் இணைந்தனா்.தவெகவில் இணைய யாரும் எனக்கு அழுத்தம் தரவில்லை. எனது சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே இணைந்தேன் என்றாா் அவா்.