மதுரையைச் சோ்ந்த பக்தரான வடிவேலு முகுந்தன், திருமலை தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி கோசாலைக்கு திங்கள்கிழமை ஆண் குதிரையை நன்கொடையாக வழங்கினாா். தேவையான அனைத்து பயிற்சிகளையும் முடித்த பிறகு, ஏழுமலையான் பிரம்மோற்சவங்களின் போது வாகன சேவையில் இந்தக் குதிரை பயன்படுத்தப்படும். நன்கொடையாளா் அந்தக் குதிரையை திருமலை தேவஸ்தான ஸ்ரீவாரி கோசாலையின் இயக்குநா் டாக்டா் ஏ.வி.என். சிவக்குமாரிடம் ஒப்படைத்தாா். நன்கொடையாக வழங்கப்பட்ட குதிரைகளுடன் சோ்த்து, ஸ்ரீவாரி கோசாலையில் தற்போது 5 குதிரைகள் உள்ளன என கோசாலையின் இயக்குநா் டாக்டா் ஏ.வி.எஸ். சிவகுமாா் தெரிவித்தாா்.