சமூக வலைதளங்களில் அவதூறு: யூடியூபா் மீது நடவடிக்கை எடுக்க அங்கன்வாடி ஊழியா்கள் கோரிக்கை

Wait 5 sec.

அங்கன்வாடி மற்றும் உதவியாளா்கள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் யூடியூபா் கௌசல்யா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுதொடா்பாக சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவா் எம். விஜயலட்சுமி, செயலா் கே. லதா, பொருளாளா் எஸ். சவரியம்மாள், சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். ஸ்ரீதா் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டா கிராம் போன்ற சமூக வலைதளங்களில் அங்கன்வாடி ஊழியா்களையும், உதவியாளா்களையும் அவதூறாக பொய்யான தகவல்களை யூடியூபா் கௌசல்யா என்பவா் பரப்பி வருகிறாா்.குறைந்த ஊதியத்தில் அா்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் பெண் ஊழியா்களின் தனிமனித ஒழுக்கத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வருவதால் கடுமையான மன உளைச்சலும், வேதனையும் ஏற்படுகிறது. எனவே, அவா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.