பேரூர்கடா அரசு மனநல காப்பகத்தில் கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பேரூர்கடா அரசு மனநல காப்பகத்தின் வசதிகள் மற்றும் அங்குள்ள நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக, கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நீதிபதிகள் தேவன் ராமச்சந்திரன் மற்றும் வசந்த் பாலாஜி ஆகியோர் மனநல மையத்தின் பல்வேறு பிரிவுகளை ஆய்வு செய்து, அங்கிருந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். இந்த மையத்தின் கட்டடங்கள் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளை நீதிபதிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இந்த மனநல காப்பகத்தின் அவல நிலை தொடர்பான வழக்கு ஒன்றில், உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிமன்றத் தோழர் வி. ராம்குமார் நம்பியாரும் இந்த ஆய்வின் போது நீதிபதிகளுடன் உடன் இருந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கிருந்த நீதிபதிகள், உள்நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ள வார்டுகள் மற்றும் அறைகளையும் பார்வையிட்டதாக அதிகாரிகள் மேலும் கூறினர். விசாரணைக் கைதி மரணம்: முதல்வர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்