பிரபல மலையாள நடிகை பார்வதி திருவோத்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திவரும் சிஜேபி (கரப்பான் பூச்சி மக்கள் கட்சி)க்கு ஆதரவாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் காவல்துறையினரையும் ஆட்சியாளர்களையும், “பாதுகாப்பவர்களே வன்முறை செய்பவர்களாக இருக்கிறார்கள்” எனவும் சர்ச்சையாகக் கூறியுள்ளார். நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட காரணங்களுக்காக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி அபிஜித் திப்கே தலைமையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜூன் 20 ஆம் தேதியில் தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தைத் தொடங்கி நடத்தி வருகின்றனர்.இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், 21 நாள்களாகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த நிலையில், அவரை தில்லி காவல்துறையினர் இன்று காலை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.இதனிடையே இன்று போராட்டத்தில் சிஜேபி கட்சி நிறுவனர் அபிஜ்த் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் மீது மை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில், இது குறித்து நடிகை பார்வதி திருவோத்து தனது இன்ஸ்டா பக்கதில் கூறியிருப்பதாவது: எங்கள் உரிமைகளைப் பறித்தல். எங்கள் குரல்களைப் பறித்தல். பாதுகாப்பவர்களே வன்முறையாளர்களாக மாறும்போது, ஏமாற்றுகாரர்களும் பொய் பேசுபவர்களும் ’நமது’ இந்தியாவை நிர்வகிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்பதை நாம் அவர்களுக்கு நினைவூட்டுவது நல்லது. ஜந்தர் மந்தரிலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் போராடும் தைரியமான மக்களுக்கு ஆதரவு அளிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.பிரியங்கா சோப்ரா பிறந்த நாள்: வாரணாசி படக் காட்சிகளுடன் வாழ்த்திய ராஜமௌலி!When the protectors becomes the abusers actress Parvathy condemn and support CJP protests