நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர். காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வரும் நிலையில் அதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமார் பொறுப்பேற்றது முதல் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற ஜூலை 20 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என திமுக எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.இந்த திட்டம் தமிழ்நாடு விவசாயிகளின் நலன்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த முக்கியப் பிரச்னையை அவையில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக மக்களவைச் செயலருக்கு திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர். பாலுவும் மாநிலங்களவைச் செயலருக்கு திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவாவும் நோட்டீஸ் அளித்துள்ளனர்.திமுக வெளியிட்டுள்ள அறிக்கை:"காவிரி ஆற்றின் மீது முன்மொழியப்பட்டுள்ள மேகதாது சமநிலைப்படுத்தும் நீர்த்தேக்கம் (Mekedatu Balancing Reservoir) குறித்த கவலைகள், அதனால் பாதிக்கப்படும் மாநிலமான தமிழ்நாட்டின் மீதான அதன் தாக்கம் மற்றும் இது தொடர்பாக ஒரு தீர்ப்பாயத்தை அமைப்பதன் அவசியம் ஆகிய அவசர முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தை விவாதித்து தீர்மானத்தைக் கொண்டு வருதல்" என்ற தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவை அலுவல் நடத்தை விதிகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள பிற அலுவல்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்திடவும் இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வரவும், மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. Mekedatu Dam Issue: DMK moves adjournment motion notice in Parliamentஜன நாயகன் பட வெளியீட்டை திருவிழா போல கொண்டாடுங்கள்! அமைச்சர் ஆனந்த்