காதல் திருமணம் செய்ததற்காக பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கானுக்கு சமூக ஊடகத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் ஆமிர் கான் கடந்த சில நாள்களுக்கு முன்பு அவரது காதலியான கௌரி ஸ்பிராட்டை வீட்டிலேயே திருமணம் செய்துக்கொண்டார். இவர்களின் திருமணத்துக்கு ஏராளமான பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், நடிகர் ஆமிர் கான் லவ் ஜிகாத்தை பரப்புவதாகக் குற்றஞ்சாட்டிய 2 மர்ம நபர்கள், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அதற்கான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனக் கூறி அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளனர். இதுகுறித்த குரல் பதிவில், அந்த 2 மர்ம நபர்களும் தங்களை அர்சு பிஷ்னோய் மற்றும் டைசன் பிஷ்னோய் எனவும், தாங்கள் லாரன்ஸ் பிஷ்னோய்யின் கூட்டாளிகள் எனவும் அடையாளப்படுத்தியுள்ளனர்.இந்த விவகாரம் குறித்து, நடிகர் ஆமிர் கான் தரப்பிலிருந்து எந்தவொரு புகாரும் அளிக்கப்படவில்லை. இருப்பினும், அந்தப் பதிவின் நம்பகத்தன்மை மற்றும் அந்த மர்ம நபர்கள் உண்மையிலேயே சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி லாரன்ஸ் பிஷ்னோய்யின் கூட்டாளிகளா என்பது குறித்து மும்பை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, முஸ்லீம் ஆண் ஒருவர் ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை மதமாற்றம் செய்யும் நோக்கத்துடன் திருமணம் செய்வதை வலதுசாரி அமைப்புகள் லவ் ஜிகாத் எனும் பிரசாரமாகக் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஏற்கெனவே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கும்பல் மான்களை வேட்டையாடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நடிகர் சல்மான் கானை கொலை செய்ய முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.ஜந்தர் மந்தரிலிருந்து சோனம் வாங்சுக்கை நீக்கியது தவறு! - ராகுல் காந்திPopular Bollywood actor Aamir Khan has received a death threat on social media for having a love marriage.