விக்ரம்-1 சாதனை: இந்தியாவுக்குப் பெருமை - பிரதமர் மோடி!

Wait 5 sec.

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம் - 1 விண்வெளியில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதற்கு ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் குழுவினருக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். தெலங்கானாவின் ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம்-1 என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட இருந்தது. தொழில்நுட்ப காரணமாக விண்ணில் ஏவப்படுவதில் சற்று தாமதமானது. கோளாறு சரிசெய்யப்பட்டு 20 நிமிட கவுண்ட்டவுன் மீண்டும் தொடங்கிய நிலையில் 12.05-க்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், விக்ரம்-1 ராக்கெட்டை தயாரித்துள்ள ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு எனது பாராட்டுக்கள்.இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விண்வெளியில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதற்கு தொலைபேசி வாயிலாக விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். விக்ரம்-1 திட்டத்தின் விஞ்ஞானிகள் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவன விக்ரம் -1 வெற்றியால் தனியார் ராக்கெட் ஏவும் திறன் பெற்ற 3-வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இது இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல். இந்தச் சாதனை எண்ணற்ற இளைஞர்களைப் பெரிய கனவுகளைக் காணவும், அச்சமின்றிப் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும் ஊக்குவிக்கும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.Prime Minister Narendra Modi on Saturday spoke to the team of Skyroot Aerospace, which spearheaded India's first privately developed orbital rocket Vikram-1, and termed it a defining moment in India's space journey.என் அனுமதியின்றி எந்த சிகிச்சையும் தொடங்கக்கூடாது! சோனம் வாங்சுக் மனைவி