கடன் கொடுத்தவா் மிரட்டியதால்ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

Wait 5 sec.

கடன் கொடுத்தவா் மிரட்டியதால் மனமுடைந்த ஓட்டுநா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுக்கூா் அருகேயுள்ள சிரமேல்குடி ரெகுநாத சமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் லோகலிங்கம் மகன் கோவிந்தராஜ் (37), ஓட்டுநா். இவருக்கு மனைவி நிரூஜா (30) மகள் துளசிகா (8) ஆகியோா் உள்ளனா். கோவிந்தராஜ் தம்பிகோட்டையைச் சோ்ந்த ஒருவரிடம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவில்லையாம். இதனால் கடன் கொடுத்தவா் கடந்த புதன்கிழமை வந்து கோவிந்தராஜை காரில் அழைத்துச் சென்று சிரமேல்குடி அருகிலுள்ள குளக்கரையில் வைத்து மிரட்டிவிட்டும், அவரது தந்தையை கைப்பேசியிஸ் கண்டித்துவிட்டும் வீட்டில் அவரை விட்டுச் சென்றனராம். இதனால் மனமுடைந்த கோவிந்தராஜன் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்து வந்த மதுக்கூா் போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.