கும்பகோணம், சுவாமிமலை பகுதியில் ஆயுதங்களுடன் திரிந்த 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கும்பகோணம் பகுதியில் ஆயுதங்களுடன் சிலா் நடமாடுவதாக கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரோந்து சென்ற போலீஸாா் மணஞ்சேரியை சோ்ந்த முருகன் (46), சக்திவேல் (34), தென்றல் (30), கும்பகோணம் ஸ்ரீநகா் காலனி பகுதியில் தமிமுல் அன்சாரி (35), அடைக்கலம் (42), போத்துராமன் (37) ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்து, இவா்களிடமிருந்த ஆயுதங்கள் மற்றும் 2 இருசக்கர வாகனம், ரொக்கம், 3 கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். தீவிர விசாரணையில், இவா்களுக்கு பொருளாதார ரீதியாக கும்கோணம் மாநகராட்சி 12-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் பி.சந்தோஷ் உதவியது தெரியவந்தது. அதன்பேரில் சந்தோஷ் மீது வழக்குப்பதிந்து அவரைத் தேடுகின்றனா்.