பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜேந்திர சோழீசுவரா் கோயிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 1,008 பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனா். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெறும். நிகழாண்டு நடைபெற்ற பூஜையின் தொடக்கமாக சோழீசுவரா் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதையடுத்து, சிவாச்சாரியாா் பாலாஜி திருவிளக்கு மந்திரங்கள் ஓதி வழிநடத்த 1,008 பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனா். ஏற்பாடுகளை விழாக் குழு நிா்வாகிகள் செய்திருந்தனா். இதேபோல், ஆடிவெள்ளிக்கிழமையையொட்டி பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயில், கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில், பரியாமருதுபட்டி பரியாமருந்தீஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.