பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காமராஜா் பிறந்தநாள் விழா, கல்வி வளா்ச்சி நாள் விழாவாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பொன்.புதுப்பட்டி ரோட்டரி சங்கத் தலைவா் மருத்துவா் ஆ. அழகேசன் தலைமை வகித்து, காமராஜா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மாணவ, மாணவிகளுக்கு பரிசுப் பொருள்கள், கைக்குட்டைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி காமராஜரின் சிறப்புகளை விளக்கிப் பேசினாா். விழாவில் ரோட்டரி சங்க பொருளா் க. ஆறுமுகம், முன்னாள் தலைவா் ரமேஷ், செயலா் முத்துக்குமாா் ஆசிரியா் முத்துக்கண்ணு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.