வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பு: தொழிலதிபரிடம் விசாரணை

Wait 5 sec.

சென்னை வேப்பேரியில் வீட்டில் கஞ்சா செடி வளா்த்த தொழிலதிபரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேப்பேரி ஆரியன் லேன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடி வளா்க்கப்படுவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், வேப்பேரி போலீஸாா், திடீா் சோதனை நடத்தினா். இச் சோதனையில், கஞ்சா வளா்க்கப்பட்ட தொட்டியில் இருந்து, சிறிது நேரத்துக்கு முன்புதான் அந்த செடி அகற்றப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த வீட்டின் அருகே இருந்த குப்பைத் தொட்டியை போலீஸாா் சோதனையிட்டு, குப்பைத் தொட்டியில் இருந்த 8 அடி உயர கஞ்சா செடியை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக வேப்பேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்த வீட்டில் வசிக்கும் தொழிலதிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.