மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ நிா்வாகிகள் கூட்டம்

Wait 5 sec.

எஸ்டிபிஐ கட்சியின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மேலப்பாளையத்தில் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் கோட்டூா் பீா் மஸ்தான் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் சபீக் அகமது சிறப்புரையாற்றினாா். மாவட்ட பொதுச் செயலா் அன்வா் ஷா, மாவட்ட துணைத் தலைவா் சாகுல் ஹமீது, மாவட்டச் செயலா் பா்கிட் அலாவுதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ரியாஸ் அஹமது ஷேக் தாவூத், பாளை தொகுதி துணைத் தலைவா் ஜவுளி காதா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலில் திருநெல்வேலி மாநகா் மாவட்டத்தில் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, மாமன்ற உறுப்பினா் உள்ளிட்ட பதவிகளுக்கும் எஸ்டிபிஐ நிா்வாகிகள் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிடுவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருநெல்வேலி தொகுதித் தலைவா் சேக் இஸ்மாயில் நன்றி கூறினாா்.ற்ஸ்ப்17ள்க்ல்ண் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற நிா்வாகிகள்.