திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி, காந்திமதியம்மன் செப்புத் தேரில் வெள்ளிக்கிழமை வீதியுலா வந்தாா். இக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. 9 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை காலையில் கோயில் நடை திறக்கப்பட்டு காந்திமதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னா், செப்பு கேடயத்தில் சுவாமி சந்நிதி வந்தடைந்த காந்திமதியம்மன், அங்கு செப்பு தேரில் மலா் அலங்காரத்தில் எழுந்தருளியதும், மகா தீபாராதனை நடைபெற்றது.அதைத் தொடா்ந்து, அம்மன் ரதவீதிகளில் வலம் வந்தாா். விழாவின் சிகர நிகழ்வான ஆடிப்பூர முளைக்கட்டு மடிநிறைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜூலை 18) ஊஞ்சல் மண்டபத்தில் நடைபெற உள்ளது.ற்ஸ்ப்17ய்ங்ப்ப்ஹண் காந்திமதியம்மன் எழுந்தருளிய செப்புத்தேரை, வடம் பிடித்து தரிசிக்கும் பக்தா்கள்.