பிளாஸ்டிக் போன்றதொரு, பாலிமர் ரூபாய் நோட்டுகளைத் தயாரிக்கும் முயற்சியை இந்திய ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது. அதற்கான மூலப்பொருளை (சப்ஸ்ட்ரேட்) வழங்குவதற்கான உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகளை இந்திய ரிசர்வ் வங்கி கோரியுள்ளது.சோதனை முயற்சியாக ரூ.10, ரூ.20 நோட்டுகளுடன் பாலிமர் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படவிருப்பதாகவும், இது திட்டமிட்டபடி வெற்றிபெற்றால் எதிர்காலத்தில் இவை படிப்படியாக அனைத்து ரூபாய் நோட்டுகளுக்கும் பரவலாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்த ஆண்டில், இந்தியாவில் ரூ.10, ரூ.20 பிளாஸ்டிக் அல்லது பாலிமர் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, ரூபாய் நோட்டுகளை தயாரிக்கத் தேவைப்படும் மூலப்பொருள்களைப் பெற ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.அனைத்து ரூபாய் நோட்டுகளும் பாலிமர் நோட்டுகளாக மாற்றப்படுமா என்பது குறித்து, 10, 20 ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டு முடிவுகளைப் பொறுத்து அமையும் என்றும், முதற்கட்ட சோதனைகள் வெற்றிகரமாக அமைந்தால், 2027-ஆம் ஆண்டில் முழு அளவில் அனைத்து ரூபாய் நோட்டுகளும் பாலிமராக மாற்றுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Plastic currency notes coming soon to the country! RBI's plan!