பழனி கோயிழுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி புகாரில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், பத்திர எழுத்தர் ஆகியோரது வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பழனி மலையடிவாரத்தில் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலம், விதிமுறைகளை மீறி அறக்கட்டளை நிா்வாகம் ரூ.100 கோடிக்கு விற்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதற்கான பத்திரப்பதிவும் நடந்துள்ளது. இதுதொடர்பான வழக்கை காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் சிபிசிஐடி -க்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகள் 3 ஆவது நாளாக இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த வழக்கில் நிலத்தை விற்ற முருகதாஸ் சாமிகள், நிலத்தை வாங்கிய பழனி சேதுபதி, வெள்ளத்துரை ஆகிய மூவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு முன்ஜாமின் வழங்கியது. தொடர்ந்து இன்று காலை முதலே சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜஸ்டின் மணிகண்டனிடமும் அதிகாரிகள் நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல, பத்திரப் பதிவில் சாட்சி கையொப்பமிட்ட அறக்கட்டளை நிர்வாகி நெல்லையைச் சேர்ந்த சண்முக சுந்தரம் என்பவரது வீட்டிலும் சிபிசிஐடி போலீஸ் விசாரணை செய்கின்றனர். ஜஸ்டின் மணிகண்டனின் நண்பரும் பத்திர எழுத்தருமான ஜெயப்பிரகாஷ் வீட்டிலும் போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர். Palani Temple Land Fraud: Raids on Homes of Sub-Registrar and Document Writerபழனி ரூ.100 கோடி நில முறைகேடு வழக்கு: சார் - பதிவாளருக்கு முன்ஜாமின்!பழனி கோயில் நில முறைகேட்டின் பின்னணி என்ன? தொடர்புடையோர் எங்கே?